पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६४

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

உபயவேதாந்தக்ரதமாலை
உபரிகைளாம் ச்வேதாச்வதரோபநிஷத்து
உபநிஷத்துக்களில் ஈசாவாஸ்யம் முதல் பிருஹதாரண்யகம் வரை யிலாம் பத்து உபநிஷத்துக்கள் த்வைதம், அத்வைதம் , விசிஷ்டாத் வைதம் என்ற மூன்று மதத்தினராலும், மற்றும் பல வேதாந்திகளா லும் உரையிடப்பட்டிருக்கின்றன. வேதவ்யாஸரென்ற பாதராயண முனிவர் தமது சாரீரகசாஸ்த்ரமாகிற ப்ரம்மஸுத்ரத்தில் இந்தப் பத்து உபநிஷத்துக்களைப் போலே பிற உபநிஷத்துகளிலும் சிலவற் றைக் கையாண்டிருக்கின்றாரென்றது எல்லா மதத்தினரும் இசைந் ததேயாம். இதனை வேறிடத்தில் விளக்கியுமுள்ளோம். அவ் வண்ணமே பகவத் ராமானுஜஸ்வாமிபாதர்களும் தமது ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களில் கையாண்டிருப்பதால் அத்தகைய உபநிஷ த்துக்களுக்கும் உபநிஷப்பாஷ்யகாரர் என ப்ரஸித்தி பெற்ற ஸ்ரீரங்க ராமாநுஜஸ்வாமிகள் பாஷ்யமியற்றியுள்ளார். ஆனால் ஈசாவா ஸ்யோபநிஷத்துக்கு ஸ்ரீமந்நிகமாந்தமஹாதேசிகன் அருளிச்செய்த பாஷ்யமிருப்பது போல் பத்துக்கு மேலான உபநிஷத்துக்களில் ஸுபாலோபநிஷத்திற்கு ஸ்ரீச்ருதப்ரகாசிகாசார்யர் அருளிச்செய்த பாஷ்ய மிருப்பதை நினைத்து பற்ற உபநிஷத்துக்களுக்கு மட்டுமே இவர் பாஷ்ய மிட்டருளினபடி.
அவ்வுபநிஷத்துக்களில் முதன்மையானது சவேதாச்வதரோப நிஷத்து. இது நூற்றெட்டு உபநிஷத்துக்களில் பதினோராம் உப நிஷத்தான படியாலே மேலுபநிஷத்துக்களுக்கு முந்தியதாம். இதில் அத்யாயங்கள் ஆறு. சித்து, அசித்து, ஈச்வரன் என மூன் முகத் தத்துவங்களை வகுத்ததற்கு இதுவே மூலாதாரமாம். மற்ற உபநிஷத்துக்கள் போன வழியை விட்டு இது வேறு வகையிலே வமராகக் கக்சவக்கை கேசி
- கார்