पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६६

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

பங்கள் தொலைகின்றன. - லினின்று பிரிந்தபோது பரமாத்மாவி னிடம் சென்று கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று அவனிடம் வாழ்ந்து வருகிறான். இப்படிப்பட்ட ப்ரப் மத்திற்கு மேல் ஒன்றும் இல்லை. இது அரணிக்கட்டையில் அக்ளி போன்றது. எளிதிலறியவிய லாதது. ஜீவாத்மாவைக் கீழாணிக்கட்டையாகவும், ப்பணவமென்ற பந்திரத்தை போலணியாகவும் கொண்டு த்யானர் செய்தலெனப் படும் கடைவதென்ற பெருஞ்செயலால் பறைந்துள்ள அதை க்ரம மாகக் காணவேண்டும். எள்ளில் எண்ணெய் போலவும், தயிரில் நெய் போலவும், ஆறுகளில் தண்ணீர் போலவும், அரணிக்கட்டை யில் அக்னி போலவும் ஜீவாத்பாவினுள் பரமாத்மா மனறந்திருப்ப தைத் தவம் செய்து தெரிந்துகொள்ளவேண்டும். 2. த்யானம் செய்பவர் கர்மாநுஷ்டானத்தை விடாமற் செய்துவரவேண்டும். பரமாத்மாவிற்கு அந்தரங்கர்களின் (விஷ்வக் ஸேநர், ஆசார்யர் போன்றாரின்) அநுக்ரஹம் பெறவேண்டும். எம் பெருமானை வாயார வாழ்த்தி அவனது அருள் பெற்று அவனிடம் மனத்தைப் பதியவைக்கவேண்டும். பருக்கைக்கற்கள், மணல் முதலியன இல்லாததும், சத்தம், சைத்யம், சூடு முதலியவற்றிற்கு இடமாக ததும், மனத்துக்கு அனுசுடலமாயும், மேடுபள்ள மின்றி பும், சுத்தமாயு முள்ள காற்றில்லாக் குகை போன்ற ஓரிடத்திலே தலை, கழுத்து, மார்வு இவற்றை நன்கு நிமிர்த்தித் தகுந்த ஆலகத் தில் வீற்றிருந்து புலன்களினின்று பொறிகளைப் பறித்து, ப்ராணாயா பாடங்களை ஒழுங்காகச் செய்து மனத்தை இலக்கில் நிறுத்த வேண்டும். பரப்ரயாம் இனி த்யானத்தில் தோன்றுமென்பதற்குப் பல அறி குறிகள் உண்டாம். யோகத்தினால் அக்னியைப் போன்ற உடல் பெற்றவனுக்கு, நோய், மூப்பு, இறப்பு என்பவை நெருங்கமாட்டா. உடல் இலகுவாயிருக்கும். நிறம் பெறும். குரல் செம்பை யாயிருக்கும். நறுமணமுண்டு. மூத்ரபுரீஷங்கள் குறைபடும். பளபளப்பான பிம்பம் போலும் தீபம் போலும் விளங்கின ஜீவாத் பாவினுள்ளே பரமாத்மாவைக் கண்டவன் கட்டினின்று விடப் படுகிறான் . ஸர்வாந்தர்யாமியான பெருமானவன். 3. ஸ்ருஷ்டிஸ்திதிஸப் ஹாரங்களைச் செய்பவன் ஒருவனே. மோக்ஷமளிப்பவன் அவனே. வேறொருவனல்லன். எல்லாவற் றையும் செய்ய வல்லமை வாய்ந்தவன். மோக்ஷத்திற்கு விரகான