पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/६८

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

கிடக்கும் . இந்த ஜீவாத்மா தன்னின் வேறாகத் தன்னிடம் அன்புள்ள லர்வேச்வினையும் - அவன் போன்மையையும் அறிந்தா னாகில் . துயரற்று விளங்குவான். அவனை பறியாமே எத்தனை வேதங்களை யோ துவதும் வீணர். அவனே மாயன். மாயையாவது மூலப்ரக்ருதி. அவனுடைய அம்சங்களே ஜீவர்கள் யாவருமாவர். தேவர்களையும் ஸ்ருஷ்டி செய்பவன். ஹிரண்யகர்ப்பனென்ற நான் முகனைப் படைத்து அனுக்ரஹம் செய்தவனவன். எங்கு மூள னாகிலும் எவ்வித தோஷமும் தட்டாதவன். . இவனே ப்ரளயத்தில் - இருந்தவன், ஸூர்யமண்டத்தினுள் விளங்குகின்றவன். இவனாலே நல்வழியி விழியத் தொல்லறிவு பெறுகின்றனர். இவனும், இவனுடைய திருவுருவும் கண்ணாற் காணக்கூடா. இவனைச் சரணமடைந்து பக்தியை, வளர்த்த வேண்டும் ஐச்வர்யங்களைப் பெறலாம். 5. ஜ்ஞானம், கர்மம் என்ற இரண்டாலும் அவனை யாராதிக்க வேண்டும். ஆராதிக்கும் ஜீவன் வேறு ; ஆராதிக்கப்படும் அவன் வேறு. ஞானத்திற் சிறந்த கபிலரைப் படைத்தவனும் அவனே. தேவதைகளம், ரிஷிகளும், பிரபனு மெல்லோரும் இந்த ப்ரம்மத்தை யறிந்தே போக்ஷம் பெற்றனர். லத்துவ ரஜஸ் தமோகுணங் களுக்கு வசப்பட்டுப் பல வினைகளைச் செய்து பலன்களை யனுபவிக்க உடலும் கருவியும் கொண்டு அறைங்கார மமகாரங்களுடன் திரியும் இந்த ஜீவன் ஒவ்வொருவனும் தன் இருப்பிடமான ஹ்ருதயம் கட்டை விரலளவாயிருப்பதனால் அங்குஷ்டமாத்ரமாய், உண்மையில் செருப்பாணியின் முனை யத்தனையாய், வால்நெல்லின் வாலின் நுனியை எண்ணற்ற பாகங்களாகப் பிரித்தால் முடிவில் இருக்கும் (பிரிக்கமுடியாத ஒரு பிரிவவ்வளவாய் (அவயவமின்றி) அணுவாய் இருப்பன். மோக்ஷத்தில் தனது ஞானமாம் ஒளியைக்கொண்டு எங்கும் பரந்திருப்பன். இந்த ஜீவாத்மா ஆணல்லன், பெண் ணல்லன், அலியுமல்லன். எந்த உடல் பெறுகிறதோ, அதைப் பற்றி அவ்வாறு கூறப்படுகிறான். நல்வினைகளால் சிறந்த பிறவி பெறுகிறான். வேறு வினைகளின் பயனாக வேறு பிறவியாம். அத்தகைய வினைகளுக்கு அவ்வவ ஆத்மாவின் குணங்களே காரணம். அக் குணங்களுக்கு முன் வினை காரணமாம். இவற்றை யெல்லாம் கொண்டு ஸர்வத்தையும் ஸ்ருஷ்டி செய்யும் பெருமானை யறிந்தார் மோகவும் பெறுவர்.

ix