पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७१

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

அப் பெயர்கள் ஏற்பட்டன. இந்த நான்கு மாத்ரைகளை மனிதனுக் குள்ள நான்கு தசைகளான, : விழிப்பு, சொப்பனம், உ றக்கம், மோக்ஷமென்றவைகளாகவும் பாவிப்பதுண்டு. இப்படிப்பட்ட இந்த ப்ரணவமே த்யானத்திற்கு ஸா தனமாம். எல்லாக் கருவி களையும் பனத்திலே லயிக்கச் செய்து செய்யப்படும் த்யானத்தை விஷ்ணுவாக பாவிக்க வேண்டும். அதாவது, விஷ்ணு மயமாக அந்த த்யானம் ஆகவேண்டும். ஆகவே த்யானத்திற்கு அதிஷ்டாத தேவதையும் அதுவேயாம். இந்திரியங்கள், ப்ராணன், மனம் எல்லாவற்றையும் அடக்கி த்யானம். செய்பலன ருக்ரனாக பாவிக்க வேண்டும். அதாவது ஸர்வஜ்ஞனான ரூதன் எம்பெருமானின் தியானத்தில் மிக்க பேர் பெற்றவன். அவன்தான் அங்ஙனமிருப்ப தாக உலகத்தார் உணராதபடி தன் உருவைப் பல வேஷங்களாலே வேறுபடுத்திக் கொண்டு தன் நிலையை ஆவிஷ்காரம் செய்யாதவன். அவனைப் போல் நன்கு த்யானம் செய்கிறவனாக வேண்டும் ஒவ்வொரு உபாஸகனும். த்யானம் பண்ணப்படவேண்டும். தத்துவ மெதெனில். பாம்பா, விஷ்ணு, ருத்ரன் -ன்பவர் இந்திராதி களைப் போலே உண்டாகின்றவரே. விஷ்ணு அவதார புருஷனான படியாலே அவனும் மூலபுருஷனும் ஒருவனே என்றாலும் ப்ரம்மா வும், ருத்ரலும் காரணமாகமாட்டார். அவர்கள் ஸ்ருஷ்டி ஸம்ஹா ரங்களைச் செய்கின்றவராய் சிலவற்றிற்குக் காரணமானாலும் மூலகாரணமாகமாட்டிலர். ஆகையால் ஸர்வைச்வர்யமுள்ளவனாய் ஸர்வகாரணமாய் ( முன் அறைமாத்ரையின் தேவதையாகச் சொல்லப்பட்ட) பரமபுருஷனே எல்லோருக்கும் ஸுகமளிப்பவனாய் உபாஸிக்கப்படவேண்டியவனாவன். அதர்வசிகை முற்றிற்று. கௌஷீதகி உபநிஷத்து கார்க்யனின் பிள்ளையான சித்தனென்ற அரசன் அருணரின் புத்ரரை யாகம் செய்விக்க வரித்தனன். அவர் தம் புதல்வனான ச்வேதகேதுவை 'யனுப்பினார். அரசன் அவனை . வினவினான். - கௌதம புத்தரே! என்னையோ, மற்றவரையோ : யாகம் செய் வித்து அடைவிக்கும் லோகத்தைப் பற்றிய இ ஹஸ்ய மேதேனு