पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७३

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

மனக்தையும் கண்களையும் வசப்படுத்தும் தேவிகள் முறையே ப்ரியையென்னும் ப்பதிருபையென்னும் இருவர் புஷ்பங்களைப் பறிக்கா விற்பர்கள். மற்றும் எண்ணற்ற ஸ்த்ரீ ரத்னங்கள் விளங்குகின்றனர். அத்தகைய ப்ரம்மலோகத்திற்கு முமுடி செல்லுகிறன். பகவானும், ' நமது புகழாலே விரஜையாற்றுக்கு வந்து விட்டான். விரைவிற் செல்லுங்கோள்' என்று உத்தரவிடுகிறான். ஐந்நூறு திவயாப்ஸரஸ்ஸுக்கள் எதிர்கொள்ள ஓடி வருகின்றனர். கையில் மாலையைக் கொண்டு வருகிறவர் நூறு, மை கொண்டு வருபர் நூறு, கந்தப் பொடி, பட்டுவஸ்திரம், பூஷணம் இவற்றி லொவ்வொரு வகைக்கு ஒவ்வொரு நூறுபேர். வந்து ப்ரம்மாலங் காரத்தாலே அலங்காரம் செய்கின்றனர். பிறகே ப்ரம்மத்தை யறிந்தவன் பிம்பத்தினிடம் பரியாதையாகச் செல்லுகிறான். அர்ச்சிராதி பார்கத்தால் வந்த முக்தன் அரமென்ற படுவை ஸங்கற் பமாத்திரத்தால் கடந்து, தடியோங்கி நிற்கும் மூஹூர்த்தரென்பவர் தாங்களே விலக விரஜையாறு கிட்டி அதையும் ஸங்கல் பத்தாலே கடக்கிறான். இவன் சரீரத்தை விட்டு, ஸுக்ர தங்களை சினேகிதரும், பாபங்களைப் பிறரும், சொத்தைப் புத்ரனும் பெறலாயிருக்கப் புண்ணியம் பாபமென்றவற்றை உதறிவிட்டானாகையாலே ப்ரம்மத் தயே பெற வருகிறான். அவன் தில்யமென்ற மாத்தை யணுனேபோது ப்ரம்மத்தின் மணம் இவன் உடலுக்கேற்படுகிறது. ஸாலஜ்யமென்ற லம்ஸ்தா னத்திற்கு வந்தபோது ப்ரம்மத்தின் திருமேனியின் சுவை இவனுட லுக்குச் சேருகிறது. அபராஜிதமென்ற அரண்மனையிற் புகுந்த ஓம் ப்ரம்மதேஜஸ் இவனிடம் புகுகிறது. பிறகு இந்தான், ப்ரஜாபதி என்ற தவாரபாலகர்கள் இருவரின் அருகில் வருகிறான். அவர்கள் இவனைக் கண்டதும் அப்பால் விலகுகின்றனர். விபுப் மிதமென்ற மண்டபத்தினருகிற் சென்றதும் ப்ரம்மயசஸ்ஸு இவ னுக்குச் சேருகிறது. விசக்ஷனை யென்ற பீடத்திற்கு நெருங் கின போது ப்ரக்ஞை பரவுகிறது. அமிதௌஜஸ் என்ற பள்ளியில் வீற்றிருக்கும் பெருமானைப் பெற அங்கே அடிவைத்தேறுகிறான். நீ.யாரென்று பெருமான் கேட்கப் பின் வருமாறு விடையை விண்ணப்பம் செய்கிறான், - ல்வர்க லோகத்தினின்று ஆகாயம்,