पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७५

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

12 த்வஷ்டாவின் மகனைக் கொன்றேன், வேதமோதாதவரான சந்யா ளிகளைச் செந்நாய்களுக்களித்தேன். பல ப்ரதிக்ஞைகளை மீறி மேலுல கிலிருந்த ப்ரஹ்லாத புத்ரர்களையும், ஆகாயத்தில் பௌலோமர்களை யும், பூவுலகில் காலகஞ்சர்களையும் தொலைத்தேன். அப்படிப்ட்ட எனக்கு அதனால் ஒரு மயிரும் போனதில்லை. என்னை யுபாஸிப்ப வனுக்கு, மாத்ருஹத்தி, பித்ருஹத்தி, களவு, கர்பஹத்தி போன்ற எக் கர்மாவினாலும் பலன் கெடாது. பாவம் செய்ததற்காக முகம் கறுக்காது; நான் ப்ராணன், ப்ரஜஞாதமா, அப்படிப்பட்ட என்னை ஆயுஸ் என்றும் அம்ருதமென்றும் உபாஸனம் செய். ப்ராணனே ஆயுள் ; ப்ராணனே அமுதம். ஏனெனில், உடலில் ப்ராணன் உள்ளவரையிலே ஆயுள் இருப்பது. ப்ராணனாலெயே மேலுலகில் அழிவற்றமையை அடைவது. ப்ரஜ்ஞாத்மாவென்று உபாஸித்தலால் ஸத்யாஸங்கல்ப்பனாகிறான். ஆயுள் என்றும், அம்ருத மென்றும் உபாஸிப்பதாலே இவ்வுலகில் முழுவாயுளைப் பெற்றுப் பிறகு ஸ்வர்கலோகத்தில் அழியாமலும் விளங்குகிறான். ஒரே ஸமயத்தில் வாக்கினால் பேசவும், கண்ணாற் காணவும், காதாற் கேட்கவும், மனத்தினால் த்யானிக்கவும், - இப்படி எல்லாக் கருவிகளின் கார்யங்களை ஒரே ஸமயத்தில் செய்ய - மாட்டிலோ மாகையாலே எல்லா இந்திரியங்களும் ஒவ்வொரு இந்திரியத்தின் கார்யத்திலும் ஒன்று சேருகின்றன வென்பர் சிலர். ஒரே ஸமயத் தில் எல்லாம் வேலை செய்யமாட்டாவென்பது திண்ணம். ப்ராணன்கள் எனப்படும் ப்ராணவாயு, இந்திரியங்களென்ப வற்றிலே ப்ராணவாயுவுக்கு மேன்மையை யாராய்ந்து யுக்தப்படி கொள்க. எங்ஙனமெனில், ஊமை,குருடன்,செவிடன், கை போனவன், ஹ்ருதயம் சிதறினவன் போன்றார் ஜீவித்திருப்பதைக் காணும்போது வாக்கு, கண்,காது போன்ற கருவிகளற்றவர் களும் ஜீவிப்பார்களென்பது கண்கூடு. ப்ராணவாயு புறப்பட்டு விட்டால் ஒரு நொடி கூட ஜீவிக்க மாட்டிலோம். ஆகையால் அதுவே உயர்ந்தது. அதுவே எல்லா இந்திரியங்களிலும் வியாபித்து அதன் மூலம் எல்லாம் செய்விக்கிறது. ஆனால் ஜீவாத்மாவுக்கு ப்ராதான்யமென்னலாம். அதுவுமுண்டு. ப்ராணனே ப்ரஜ்ஞை யென்னலாம். ப்ரஜ்ஞையே ப்ராணன். அதாவது இரண்டும் சேர் ந்தே இருக்கும்; சேர்ந்தே கிளம்பிவிடும். உறங்கும்பே போது எல்லாம் லயித்துவிடுகின்றன. ப்ராணன் மட்டும் சவாஸமாக ஸஞ்சரித்துக்