पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/७९

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

16 வசப்பட்டு விதம் விதமாகப் புருஷார்த்தங்களைப் பெறுகிறது. முதலும் முடிவு மின்றி ஸமஷ்டி வ்யஷ்டி ஸ்ருஷ்டிகளைச் செய்து வெளுத்தும் கறுத்தும் சிவந்துமிருந்து ஸகல பலன்களையும் அளிக் கின்றது ப்ரக்ருதியென்ற பசு. ஒரு வைஷம்யமுமின்றி அவரவர் களின் முன்வினைக் கீடாக மாறி உதவுமதனை உள்ளபடி யறியாமே மயங்கிக் குடித்துக் கெடுகின்றனர் அறியாத ஜீவர்கள். அவன் ஒருவனே ஸ்வதந்த்ரனாய் தன் திருவுளத்திற்கிணங்க நடந்து வரும் அதை வீலாரஸங்களைப் பெறும் வகையிலே அனுபவிக்கிகின்றான். மஹாத்மாக்களா யிருப்பவர் வினைப் பலன்களை உட்கொண்டு கிடக்கும் நற்சிறகுள்ள பக்ஷியான ஜீவனைப் பார்க்கின்றனர். அவனருகி லிருந்து கொண்டே உண்ணாமல் நிலைகின்று சுத்தமா யுள்ள ஹம்ஸம் போன்றவனைச் சில வேதவித்துக்கள் விளங்கச் சொல்வர். ருக்வேத ஸாமவேதாதி ஸகல வேதங்களும் அவனையே துதிக்கின்றன. 2. உலகில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஸகல வஸ்துவாயு மிருப் பவன் அவன். அவனைச் சிலர் இருபத்தாறாவது தத்துவமாகவும், கிலர் இருபத்தேழாவதாகவும், ஸாங்க்ய சாஸ்திரத்திற் சொல்லப் பட்ட ஸத்வ ரஜஸ்தமோ குணங்களற்ற ஜீவனாகவும், வ்யக்தங்கள் அவ்யக்த மென்ற இருப்பத்தினான்கு தத்துவங்களாகவும், த்வைத மாகவும், அத்வைதமாகவும், ஐந்து விதமாகவும், ஏழு விதமாகவும், ஸர்வ ப்ரபஞ்சமாகவும், ஒருவனாகவும் பார்க்கின்றனர். எல்லாம் அவனிடத்தினின்று பிறந்து கடலில் ஆறுகள் போலே அவனிடமே மறைகின்றன. மீண்டும் குமிழ்கள் போலே கிளர்கின்றன. இப்படி பகவான் லீலையாக ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களை மறுபடியும் மறுபடியும் நடத்திக் கொண்டே வருகிறான். இந்த ப்ரம்மத்தை யறிந்து உபாஸனம் செய்பவர் அவனிடத்திலே சேர்ந்து சிறந்து விளங்குகின்றனர். மந்த்ரிகோபநிஷத்து முற்றிற்று. ஹுபாலோபநிஷத்து இந்த உபநிஷத்தில் அத்யாயங்கள் பதினாறு. ஐந்து அத்யா யங்களுக்கு மட்டுமே ஸ்ரீ சருகப்ரகாசிகாசார்யிரின் உரை காணக்