पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८१

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

18 புருஷர்களாகியே யும் ஸ்ருஷ்டித்தான். நாட்டிலும் காட்டிலுமிருக்கும் மிருகங்களை ப்ரளய காலம் வந்த போது அக்னியாகி அவனே எல்லாவற் றையும் தஹிக்கிறான். அப்போது பூமி,ஜலத்திலும், ஜலம் தீயிலும், தீ காற்றிலும், காற்று ஆகாயத்திலும் லயிக்கின்றன. ஆகாயம் இந்திரியங்களோடும், இந்திரியங்கள் தந்மாத்ரைகளோடும் ஒன்று சேர உடனே தந்மாத்ரைகள் அஹங்காரத்திலும், அஹங்காரம் மஹத்திலும், மஹத்து அவயக்கத்திலும், அவ்யக்தமானது அக்ஷரத் திலும், அக்ஷரமானது தமஸ்ஸிலும் லயிக்கின்றன. அந்தத் தமஸ் ஸும் தனியே தெரியாதபடி பரதேவதையில் ஒன்றி மறைகிறது. அந்தத் தமஸ்ஸுக்கு மேலுள்ளது ஸர்வகார்யங்களுக்கும் விலக்ஷணமாம். 3. முதலில் ஸ்ருஷ்டியிலுள்ள மாறுபாடுகளெல்லாமின்றி பிறகு ஸ்ருஷ்டியில் எல்லாம் உண்டாக விளங்கும் பரமாத்மவஸ்து வானது உலகிலுள்ள தோஷமொன்றும் தன்னிடம் படாதபடி விளங்குகின்றதாம். சேதநாசேதநங்களான எல்லாவற்றினும் விலக்ஷணமாயுள்ளதாம். அது ஸப்ஸாரிகளைப் போவே வினைப் பலனைப் புசிப்பதன்று. ஸம்ஸாரிகளால் புசிக்கப்படும் ப்ராக்ருத வஸ்துவைப் போன்றதுமன்று. அதைப் பெற வேண்டுமென்றால் பலனில் பற்றுதலற்று ஸத்யம், கொடை, தவம், பிரம்மசர்யம், வைராக்யம், யஜ்ஞமென்ற ஆறு அங்கங்களைக் கொண்டு நிறை வேற்றவேண்டும் (இந்திரிய நிக்ரஹமும்,தானமும்,தயையும் முக்கியமானவை) உபாஸநத்திலிழிந்து அதனைப் பூர்த்தி செய்க. மோக்ஷம் பெறுந்தருணத்தில் ப்ராணன் முதலியன உபாஸகனை விடாமலிருந்து அர்ச்சிராதி மார்கத்திலே நடப்பதற்கு அனுகூல மாகின் றன. போய்ச் சேர்ந்த பிறகு பரப்ரம்மத்திற்கொத்த உருவம் பெற்று அதனிடமே லயிக்கிறான். 4. ஹ்ருதயத்தின் நடுவே மாம்ஸ பிண்டமொன்று (புரீதத்து) இருக்கிறது. அதில் தாமரைப்பூ, ஆம்பல் என்னலாம் போல் ஓர் அவயவமுண்டு. அங்கே நாடிகளின் வாயாக இருக்கும் துவாரங் கள் பத்து உள. அவற்றில் ப்ராணாபாநாதி வாயுக்கள் ஏற்றவாறு உலாவுகின்றன. யோகியாயிருப்பவன் அந்தந்த வாயுவின் ஸஹாயத் திற்கேற்ப ஆறுகள், நகரங்கள், தேவர்கள், ரிஷிகள், பக்ஷ க