पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८२

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

19 ராக்ஷஸ கந்தர்வர்கள், தேவலோ உங்கள், கண்டவை, காணாதவை, கேட்டவை, கேட்கப்படாதவை, உண்ணவை, உண்ணாதவை, இருப் பவை, இல்லாதவை என்றவாறு எல்லாவற்றையும் பார்க்கிறான். பத்து நாடிகள் ப்ரதானமானவை. ஒவ்வொன்றுக்கும் உட் பிரிவுகள் எழுபத்திரண்டாயிரம் சிறிய நரம்புகளாம். அங்கு ஆக்மா விழித்துக் கொள்ளாதபோதிருக்கிறான். விழிப்பிலிருக்கும் இடத்தை விட்டு இரண்டாம் ஸ்தானத்திலுள்ளபோது சொப்பன வஸ்துக்களைப் பார்க்கிறான். உறக்கத்தில் உடலை ப்ராணனே ஸஞ் சரித்துக் கொண்டு காத்துவருகிறது. அப்போது உதிரம் எல்லா நாடிகளிலும் ஏற்றத் தாழ்வின்றி பரவுகிறது. ஹிதை எனப்படும் நாடிகளோடு சேர்ந்த புரீதத்து என்ற மாம்ஸ பிண்டத்தின் இடை யிலே ஹ்ருதயாகாயத்திலே சென்று உறங்குகிறான். சென்ற வழியே திரும்ப வந்து விழித்துக் கொள்ளுகிறான். 5 பரமாத்மாவின் உபாஸனம் பல வகையாம். ஒவ்வொரு இந்திரியத்தை எடுத்துக்கொண்டு, இந்திரியம், விஷயம், இந்திரிய தேவதை, நாடி, ப்ராணன். அதனாலுண்டாம். அறிவு, அவ்வாநந்தம், ஹ்ருதயாகாசம் என்ற எட்டு இடங்களிலும் பரந்துள்ளவனாகப் பரமாத்மாவை த்யானம் செய்க. இந்திரியங்களாவன - கண், காது, மூக்கு,நாக்கு, தவக்கு (தோலிலெங்குமுள்ளது,) மனது, புத்தி, அற்றங்காரம், சித்தம், வாக்கு, கை,கால்,மலேந்திரியம், மூத்ரேந்திரியம் என்பவை, இப்பதினான்கு இந்திரியங்களுக்கும் தனித் தனி விவயம், தேவதை முதலானவற்றைச் சேர்க்கப் பதினான்கு விதமான ஈ பாஸநங்களாம். ஆங்காங்கு மூப்பு, இறப்பு, சோகம், அழிவு இல்லாத பரமாத்மா ஸர்வஜ்ஞன், ஸர்வேச்வான், ஸர்வஸ்வாமி, ஸர்வாந்தர்யாமி, ஸர்வ காரணமானவன் உபாஸிக்கப் படுகிறான். எல்லோராலும் உபாணிக்கப்படுகிறவன், ஒன்றையும் உபாஸிக்காதவன். எல்லாம் புசிப்பவன். ஒருவராலும் புதிக் கப்படாதவன். இவ்வளவே யல்ல. எல்லாக் காரியங்களையும் நிர்வஹிப்பவன், ஆஜ்ஞை செலுத்துகிறவன், உடலுக்கும். அதன் காரணங்களான பஞ்ச பூதங்களுக்கும் ஆத்மா. முக்கிய ப்ராண மென்ற உடலுக் குட்பட்ட வாயு விசேஷத்திற்கும் அதற்கு அதீனங்களான இந்திரி யங்களுக்கும் ஆத்மா, மனத்துக்கும் அதன் மூலமாகவுண்டாம் + zotio