पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८४

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

2t மாம். இப்படி எல்லாவற்றிற்கும் அந்தாயாமியாய் நேறயப்ரத்யநீகனாய், பராபதத்தில் எழுந்தருளியிருப்பவனாய், லீலா வ்யாபாரங்கள் உடையவனும் நாராயணனே. இப்படி எல்லாம் உடலாய் அவன் ஆக்மாவாயிருப்பதைப் பற்றிய வித்யையை அபாந்தரதமருக்கு அளிக்க அவர் பிரமனுக்கு உபதேசித்தார். பிரமன் கோராங்கிரஸ் என்பவருக்கு, அவர் பைக்வமஹர்ஷிக்கு, அவர் இராமனுக்கு, இராமன் எல்லோருக்கு மிதனை உபதேசித்தார். இது வேத ரஹஸ்யம். 8.இப்படி உலகெல்லாம் உடலாய், ஆத்மாவாயிதிருந்தாலும் மாம்ஸம், கொழுப்பு, வியர்வை எல்லாம் நிறைந்ததாய், மலம், மூத்ரம்,பிணி முதலானவற்றாலே தூஷிக்கப்பட்டதாய்,ஆகாயக் கோட்டை போலும், வாழையுட்புறம் போலும், நீர்க் குமிழ் போலுமாகி, சில க்ஷண காலமுமொருநிலையிலிருக்கமாட்டாததும், ஆகிலும் சித்திரமெழுதச் சுவர்போலுள்ளதுமான உடலிலே புகுந் திருந்தும் ஒரு தோஷத்திற்கு மிடமாகாதபடி மிக்க ஆனந்தமாகவே விளங்குகின்றவன் அவனென வறிக. 9. கீழ்ச் சொன்னபடி இந்திரியாதிகளுக்கு அந்தர்யாமியாய் உபாஸிக்க க்ரபமாய்ப் பரமாத்மாவினிடத்திலே லயம் பெறுகிறான். ச்ரவணம், மநநம், த்யானம்,யஜ்ஞம்,தானம், என்றெல்லா முள்ள வற்றை யநுஷ்டிப்பதாலேயே அவனை யடைந்து விட முடியு மென்ன வொண்ணாது. வைராக்யம் வேண்டும், உள் வெளி யிந்தி ரியங்களை அடக்க வேண்டும். அம்முகமாக த்யானம் செய்ய வேண்டும். 10. இவ்வுலகில் பாதாள லோகம் முதல் எல்லா லோகங் களும் மேன்மேல் லோகங்களில் ப்ரதிஷ்டை பெற்றதாகப் பணிப்பர். கடைசியாகப் பரட்மம்மத்தினிடமே எல்லாம் நிலை பெறுகின்றன. 11. உடலிலுள்ள நாடிகளிலே நான்கு முக்கியமானவை, ரமை, அரமை, இச்சை, அபுநர்பவை யென்பன அவை, புண்ய லோகம், பாபலோகம், நினைத்தவிடம்,மோக்ஷஸ்தானம் என்ற இடங்களுக்கு முறையே அவற்றின் வாயிலாகச் செல்லவேண்டும், நான்காம் நாடி வழியாகப் புறப்பட்டு ஸ்ருதயகோசம், தலைக்க