पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८५

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

22 பாலம்: இவற்றைப் பிளந்துகொண்டு, ப்ருதிவீ முதல் எல்லாத் தத்துவங்களையும் பிளந்து கடந்து ப்ரக்ருதி மண்டலத்திற்கு மேல் சென்று விடுகிறான். 12. அன்னமென்பது நாராயணணிடம் ஙண்டானது. பல உங்களில் பக்குவமாகிச் சேதானுக்கு உபயோகப் படுகிறது. தனக்கென ஏற்படுத்தப்படாததும் யாசிக்கராலே பெறப்பட்டது மானது ஏதேனுமாகிலும் பரிசுத்தமாய் புசிக்கக்கூடியதாம். 13.உபாஸனம் செய்பவன் சிறு வயதிலுள்ள பாலகன் போலே தன்னை எண்பித்துக்கொள்ளவேண்டும். க்யாதி, லாபம், பூஜைகளில் பற்றற்று, அக்ருத்யமொன்றும் செய்யாது எப்போதும் பரமாத்மாவையே நினைத்த வண்ணமாய் உபாஸனத்திற்கு வகுத்த அறிவைச் செவ்வனவே பெற்றுத் தனது மான்மியம் பிறர்க்குத் தெரியாதபடி பாலனாய் நடந்துகொள்ளவேண்டும். அறிய வேண் டுவதை யறிந்து கந்தலைக் கட்டிக் கொண்டு துணை யொன்று மபேக்ஷியாதே தனிப்பட்ட ஆத்மாவையே விரும்பி வேறெல்லாம் வெறுத்துத் தனியே மரத்தின் கீழே தங்கி த்யானத்தில் இழிந்திருக்க வேண்டும். யானை, சிங்கம், போன்றவைகளிடத்தினின்றும் அஞ்சாது மரம் போல் அசையாதிருக்கவேண்டும். வெட்டினாலும் வெகுளுவதும் நடுங்குவதும் கூடா.ஆத்மாவில் அதிக நிலையுற வேண்டும். அதே ஸத்யமானது. என்று மழியாதது. 14.உடல் முதலானவை பூகங்களிலே லயிக்க ஸ்ருஷ்டி க்ரமத்திற்கு மாறு பாடான வரிசைக்கமாக எல்லாத் தத்துவங்களும் லயமுறும். 15. இப்படி ப்ரளயம் பெறும் வஸ்துக்கள் ஸ்ருஷ்டியிலிருக் கும்போதுகூட மோக்ஷம் போகின்றவனை மறுக்கமாட்டா. எல்லா வற்றையும் தனது ஜ்ஞாநாக்கியாலே தஹித்துக் கொண்டு, அதாவது தன்னிடம் எதுவும் சிறிதும் பாதை செய்யாதபடி எல்லாவற்றையும் கடந்து விடுகிறான் ஜீவாத்மா. 16. இங்ஙனம் இவ்வுபநிஷத்திற் சொல்லப்பட்ட வித்யை யானது புத்ரன், சிஷ்யன் என்பவரை விட்டு கும் உபதேசிக்க த்தகாதது. ஒரு வருஷம் பரீக்ஷிக்காமல் உபதேசிக்கலாகாது. தேவதையினிடத்திற் போலே ஆசார்யனிடமும் ஸமமாய்ச் சிறந்த