पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/८९

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

26 போகிறேன் என்ற உறுதியுள்ளவனுக்குப் பலன் திண்ணமுண்டு" என்றார் சாண்டில்யர். அக்கிரஹஸ்யம் முற்றிற்று மஹோபநிஷத்து , நாராயணன் ஒருவனே ஸ்ருஷ்டிக்கு முன் இருந்தது. பிரமனு மில்லை,ருத்ரனுமில்லை. ஜலம், அக்னி, ஸோமன், ஸ்வர்க்கம், பூமி, நட்சத்திரம், சூர்யன், சந்திரனென்றவாறு எதுவுமில்லை.நாராய ணன் தனியாக இருப்பதில் கருப்தி பெறவில்லை. உடனே த்யானம் செய்தான். பதினான்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந் தனர். பிள்ளைகளாவார், இந்திரியங்கள் பத்து, மனன்,அஹங் காரம், ப்ராணன், ஆக்மா (உடல்) என்பன. புத்தி பதினைந்தாவது. ஐந்து பூதங்களும், ஐந்து தந்மாத்ரங்களும் பிறந்தன. இருபத்தைந் தாவது தத்துவமாவான் ஜீவன். பரமாத்மா அவனை கீழ்ச் சொன்ன இந்திரியங்கள் உடல் எல்லாவற்றையும் ஒன்றாக்கி அங்குப் புகுரித்து ஸ்ருஷ்டி செய்தான். இப்படி எல்லா ஜீவஸ்ருஷ்டிக்கும் காரணமான நாராயணன் மீண்டும் ஆலோசனை செய்து நெற்றியி னின்று முக்கண்ணனாய், சூலம் கையிலேந்திய புருஷனை ஸ்ருஷ்டி செய்தான். அவனிடம், ஸத்யம் ப்ரம்மசர்யம் முதலானவைகளும் வேதங்களும் மற்றும் பல செல்வமும் சேர்ந்தன. ஆகவே அவன் ஈசாநன் மஹாதேவனென்னப்பட்டான். நாராயணன் த்யானம் செய்ய அவரது நெற்றியில் வியர்வை உண்டாயிற்று. அதே எங்கும் பரவின நீர், அங்கே பொன்மயமான ப்ரம்மாண்டம் உண்டாயிற்று. நான்முகனான பிரமன் அங்குத் தோன்றினான். அந்தந்த லோகங் களும் தேவதைகளும் மற்றும் பல பிறந்தன. இவ்வுலகெல்லாம் அந்த நாராயணனே. எல்லா சக்திகளுமுடைய அவனை யாச்ரயித்தே உலகம் இருக்கிறது. தாமரை முட்டு போன்று ஹ்ருதயமுள்ளது. அதனுள் அக்னியும் ஜ்வாலையுமிருக்கிறது. அதனிடையில் பரமாத்மா தங்கியிருக்கின்றான், பிரமன், சிவன், இந்திரன்,நித்யஸூரி என்ற வாறான எல்லோருடைய ஹ்ருதயத்தில் அவன் விளங்குதல் பற்றி, அவனே பிரமன், அவனே சிவன் என்றெல்லாம் சொல் லப்படுகிறான். 7.