पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/९०

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

37 அஷ்டாக்ஷர நாராயணோபநிஷத்து 1 புருஷன் என்ற பெயரைத் தனக்கே பெற்றுள்ள நாராயணன் ப்ரஜைகளை ஸ்ருஷ்டிக்க வேண்டுமெ மனத் திருவுளம் கொண்டான். நாராயணனிடமிருந்தே ப்ராணன் பிறக்கிறது.மனம், இந்திரியங் கள், ஆகாயம்,வாயு,தேஜஸ்,ஜலம், பூமியெல்லாம் பிறக்கின்றன. பிரபன் பிறக்கிறான். நாராயணனிடமே வஸூ ருத்ராதித்யர்கள், வேதங்களெல் லாம் நாராயணனிடமே தோன்றுகின்றபடி. எல்லாம் நாராயண னிடமே பிறக்கின்றன, அங்கேயே லயிக்கின்றன என்பது ருக்வேத சிரஸ்ஸு. நாராயணனிடமிருந்தே ருத்ரன் பிறக்கின்றான். . என்றுமிருப்பவன் நாராயணனே. பிரம்ம ருத்ர இந்திராதிக ளும், காலமும், திக்குக்களும், விதிக்குகளும், மேலும், கீழும், உள்ளும், வெளியும் நாராயணனே. எல்லாம் நாராயணனே. வினையும் வினைப்பயனும் விபரீதஜ்ஞானமும் இல்லாதவனும்,ஹேய மான பேர் பெறாதவனும்,ஸத்துவமயனாயு முள்ள தேவன் ஒருவன் நாராயணன். மற்றொருவனில்லை. இவ்வாறு அறிந்தவன் விஷ்ணு ஸாயுஜ்யம் பெறுகிறானென்றது யஜூர்வேதசிரஸ்ஸு. திருவஷ்டாக்ஷரத்தையும், அதன் பதப் பிரிவுகளையும், ஒவ்வொரு பதத்திற்கு இத்தனை அக்ஷரங்களென்பதையும் கூறி, இந்த மந்த் ரத்தைச் சரியாகச் சொல்பவன் பூரணமான ஆயுளையும், மறுமையில் மிகுந்த பலனையும், மோக்ஷத்தையும் பெறுகிறானென்றது ளாயவேத கிரஸஸ. ஜீவனால் தனக்குச் செய்யப்படும் செயல்களைக் கொண்டு களிக்கும் ஸர்வஸ்வாமியான பரமாத்மாவைச் சொல்லும் ப்ரணவத் தில் அக்ஷரங்களைப் பிரித்து இது தெளிந்து திருவஷ்டாக்ஷரத்தைக் கொண்டு உபாஸிப்பான் வைகுண்டலோகம் செல்வான். நிர்மலமாய் ஜ்ஞாநஸ்வரூபமாய் மின்னல் போன்றதாகும். வேத வை வதிகர்களுக்குரிய பரதேவதை தேவகிபுத்ரன், மதுஸுதான், புன்டரீகாக்ஷன் விஷ்ணு. ஸர்வாந்தர்யாமியாய் ஸர்வகாரணமான பரமபுருஷனாம் பரப்ரம்மமாய், பல அவதாரங்கள் செய்யுமவன், நாராயணனென்றது அதர்வவேதசிரஸ்ஸு.