पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/९१

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

28 காலையில் திருவஷ்டாக்ஷரத்தை ஒதுகிறவன் இரவிற் செய்த பாவத்தைப் போக்குகிறான், மாலையிலோ துபவன் பகளிற்பண்ண பாவத்தைப் போக்குவான். காலையிலும் மாலையிலும் ஓதுபவன் எல்லாப் பாபமுமற்றிருப்பான். நடுப்பகளில் கதிரோனைக் கண்டு கொண்டே ஒதுபவனுக்கு மகாபாதகங்கள் ஐந்து முதலாக எல்லாம். விலகும். ஸர்வ வேதங்களையும் பாராயணம் பண்ணால் பெறும் பலன் இதை தினாலுன்டு. திருமாலின் ஸாயுஜ்யத்தையும். இவ்வா றறிந்தவன் பெறுவான். அஷ்டாக்ஷர நாராயணோபநிஷத்து முற்றிற்று புருஷஸூக்தம் புருஷஸூக்தமென்பது எல்லா வேதங்களிலும் ஓதப்படும். யஜுர்வேதத்தில் இது பதினெட்டு ருக்குக்களாக ஒதப்பட்டிருக் றது. ருக்குகளின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு ஆங்காங்கு காணக்கிடக்கிறது. வேதங்களிலே மந்த்ரபாகம் ப்ரடலமானது. அதில் அத்யாத்மவிஷயத்தை அதாவது பரதத்துவத்தைச் சொல்லும் பாகத்திற்கு ஏற்றமுண்டு. அதிலும் புருஷஸுத்தத்திற்கு மேம் பட்டதொன்றில்லை. பாபங்களுக்கு ப்ராயச்சித்தமாகவும். சாதார ணமாக ஐபத்திலும், விஷ்ணுவை ஆராதிப்பதிலும், மோக்ஷம், இம்மையிலே தேறும் இஷ்டமான பலன், அநிஷ்டத்தை நீக்குதல் என்றவாறு பல விஷயங்களிலும் இப்புருஷஸுஸூக்தத்தைப் பூர்விக ரான ரிஷிகள் பயன்படுத்தியிருக்கின்றனர். தினந்தோறும் செய் யும் ப்ரம்ம யஜ்ஞத்திலே இதனையோதினால் ஸர்வவேத பாராயண புண்யர் உண்டு. எம்பெருமானுடைய ஆராதனத்தில் இதை உப யோகிக்கும் போது ஒவ்வொரு மந்த்ரத்தை ஒவ்வொரு கார்யத்திற் காகக் கீழ் கூறும் அடைவிலே வகுத்துள்ளனர். அவையாவன- ஆவாஹனம், ஆஸநம், பாத்யம், அர்க்யம், ஆசமநீயம், ஸ்நாகம், வஸ்த்ரம்,யஜ்ஞோபாவீதம்,சந்தனம்,புஷ்பம்,தூபம்,கீபர்,நைவே த்யம், அஞ்ஜலி, ப்ரதக்ஷிணம், உத்வாஸநம் என்ற கார்யங்கள் என்பர். புருஷனைச் சொல்லும் ஸூக்தம் புருஷஸுக்தம். ஸூக்தம் என்பதற்கு நன்மொழி, திருமொழியெனப் பொருளாம். புருஷன்