पृष्ठम्:श्वेताश्वतराद्युपनिषत्पुरुषसूक्तभाष्यम्.pdf/९४

एतत् पृष्ठम् अपरिष्कृतम् अस्ति

தோன்றினர். மனத்தினின்று சந்திரன் பிறந்தான். கண்ணி கதிரோன். முகத்தினின்று இந்திரனும் அக்னியும், பிராணனிடத்திலிருந்து வாயு, கொப்பூழினின்று (ஆகாயம்) அந்தரிக்ஷ லோகம். தலையினின்று சுவர்க்கம், கால்களினின்று பூவுலகு, காதினின்று திக்குகள். இவ்வாறு உலகங்களை ஸ்ருஷ்டி செய்தனர். யாவனொருவன் ஸர்வஜ்ஞனாய் எல்லா ரூபங்களையும்,நாமங் களையும் செய்து அந்த ரூபங்களை அந்த நாமங்களாலே சொல்லிக் கொண்டு ( இதற்கு இது பெயர் என வகுத்துக் கொண்டு) தமன் எனப்படும் இப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் வீற்றிருக்கிறான், ஸூர்யனைப் போன்ற ப்ரகாசமுடைய அம்மஹா புருஷனை யானறி வேன். யாவெனொருவனைப் பிரமன் முதன் முதல் உயதேசித்தான், இந்த்ரனும் தெளிந்தான், பிறகு நான்கு திக்குகளும் நன்கறிந்தன. அந்த மஹா புருஷனை இவ்வாறு அறிந்தவன் (உபாஸிப்பவன்) இங்கே ராக ாகத்வேஷாதிகள் விலகி முக்கன் போலாகிறான். வீடு பெறுவதற்கு வேறு வழியில்லை. யஜ்ஞத்தினாலே யஜ்ஞ புருஷனை தேவதைகள் ஆராதித்தனர். அதுவே முதல் தர்மமாயிருந்தது. ஆராதித்தவர்கள் அநாதிகாலமாய் ஸாத்யதேவர்கள் நிலைத்து நிற் கும் பமபதமாம் நாகத்தை (சிறிதும் துக்கம் கலசாக ஆனந்தமே வடிவுகொண்ட உலகினை) அடைந்து விளங்குகின்றனர். இதுபுருஷஸுக்தத்தின் ஸாமாம். புருஷஸூத்த ஸாரம் முற்றிற்று. உபரிஷத் ஸாரம் முற்றிற்று. ஸ்ரீமதே ரங்க ராமாநுஜமஹா தேசிகாய நம:

உத்தமூர்.தி.லீரராகவாசார்யர். சுபமஸ்து